தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தஞ்சாவூரில், ரூ.894 கோடியில் 134 திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தஞ்சாவூரில், ரூ.894 கோடியில் 134 திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். 98.77 கோடியில் நிறைவுற்ற 90 பணிகளையும் தொடங்கி வைத்தார்.
அதன் பின் இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ராஜராஜ சோழனோடு தஞ்சை மண்ணையும் பெருமைப்படுத்தியது திமுக அரசு. காவிரி நடுவர் மன்றத்தை அமைக்க வைத்தவரும் கலைஞர் தான், தமிழ்நாட்டுக்கு எவ்வளவு காவிரி நீர் வழங்க வேண்டும் என்பதை நிர்ணயித்து அறிவிக்கச் செய்தவரும் கலைஞர் தான் என தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பயனாளிகளில் 5000 பேர் மட்டுமே நிகழ்ச்சிக்கு வரவழைக்கப்பட்டனர். எஞ்சிய பயனாளிகளுக்கு ஓரிரு நாளில் வீடுதேடி நலத்திட்ட உதவிகள் வரும். தமிழகத்தில் தற்போது அங்கே தலை தூக்க தொடங்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தமிழக அரசின் நடவடிக்கையால் இந்த ஆண்டு குறுவை சாகுபடி சாதனை படைத்துள்ளது. மேலும் நிதி நெருக்கடி இருந்தபோதிலும், ரூ.83 கோடி செலவில் நெல் கொள்முதல் நிலைய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது.
நெல் கொள்முதல் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு ஒரு மூட்டை காணக்கூடிய ரூ 3.25 லிருந்து ரூ.10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நெல் சாகுபடி பரப்பு 3.12 லட்சம் ஏக்கரில் இருந்து 3.42 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். தமிழகத்தில் நெல் சாகுபடி பரப்பை அதிகரிப்பதில், இந்த ஆறு மாதகாலத்தில் அரசு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது என தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தி மொழி திணிப்பு குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை…
சென்னை : மக்கள்தொகை அடிப்படையில் மக்களவை தொகுதியில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு முயற்சி மேற்கொள்வதாக கூறப்படுகிறது. அவ்வாறு மேற்கொள்ளும்போது…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள்…
வாஷிங்டன் : அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமான ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸின் ப்ளூ கோஸ்ட் மிஷன் 1 கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச்…
ஹைதராபாத் : தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக வலம் வந்த கல்பனா அளவுக்கு அதிகமான…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்ரேலியா அணியை வீழ்த்தி…