தமிழகம் 2030க்குள் 1 டிரில்லியன் பொருளாதாரம் எனும் உயரத்தை எட்டும்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை.!

Published by
மணிகண்டன்

சென்னையில் இன்று அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட UPS (United Parcel Service) எனும் பன்னாட்டு சரக்கு போக்குவரத்து நிறுவனம் புதிய தொழில் நுட்ப மையத்தை திறந்துள்ளது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொன்டு உரையாற்றினார்.

இந்த விழாவில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கான அனுமதி கடிதத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதன் பின்னர் அவர் பேசுகையில், அமெரிக்கவை சேர்ந்த UPS போன்ற நல்ல நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில்புரிய வருவது தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறுவதை காட்டுகிறது.

இந்திய அளவில் 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் உள்ளது. இதனை மேலும் மேம்படுத்த முயற்சித்து வருகிறோம். இதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்வதன் மூலம் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கிறது.

கடந்த 2 ஆண்டுகளில் பன்னாட்டு நிறுவனங்கள் தமிழக்தில் புதிய முதலீடுகள் மற்றும் ஏற்கனவே உள்ள நிறுவனங்கள் தங்களை புத்தாக்கம் செய்து கொண்டு வருகின்றன. வளர்ந்து வரும் சரக்கு போக்குவரத்து துறையை மேலும் மேம்படுத்த சென்னையை அடுத்த திருவள்ளூர் மற்றும் கோவையில் பல்முனை தொழில்துறை சரக்கு போக்குவரத்து பூங்கா அமைக்கப்பட உள்ளது.

தமிழக அரசின் திறன் மேம்பாட்டு தொழில்துறை மையமானது பன்னாட்டு தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. சிப்காட் மையங்களில் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 2021 – 2022 முதல் தற்போது வரையில்  30க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் நிறுவப்பட்டு அதன் மூலம் 47 ஆயிரத்திற்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.  இந்த தொழில் வளர்ச்சி அடுத்தடுத்த ஆண்டுகளில் பல மடங்கு உயரும் என எதிர்பார்க்கிறேன்.

தமிழ்நாடு மாநில திட்ட குழு தரவுகளின் படி, தனியார் செய்தி நிறுவனத்தில் வெளியான ஆய்வின் படி, கொரோனாவுக்கு பின்னர் நெருக்கடியான சூழலில் ஆட்சி பொறுப்பை ஏற்று தற்போது தொழில் துறையில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளோம். 2021-2022இல் 5.80 சதவீதமாக இருந்த உள்நாட்டு உற்பத்தி, தற்போது 8.19 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்திய அளவில் பொருளாதாரத்தில் மகாராஷ்டிரா முதலிடமும் தமிழகம் இரண்டாவது இடமும் பெற்றுள்ளது.

2021 – 2022 இந்திய அளவிலான பணவீக்கம் 9.31 சதவீதம் எனவும், 2022-2023 ஆண்டு காலத்தில் 8.82 சதவீதம் எனவும் இருந்தது. அதுவே தமிழகத்தில் , 2021 – 2022 வரையில் 7.92 சதவீதம் எனவும்,  2022-2023 ஆண்டுகளில்  5.97 சதவீதம் என பணவீக்கம் தமிழகத்தில் குறைந்துள்ளது.

இந்த ஆய்வறிக்கையை பார்க்கையில், ஏற்கனவே நிர்ணயித்தது போல  2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் பொருளாதாரத்தை தமிழகம் எட்டும் என்ற நம்பிக்கைவந்துள்ளது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

“சஞ்சு சாம்சன் வேண்டாம்” சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியை தேர்வு செய்த ஹர்ஷா போக்லே!

மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…

50 minutes ago

கர்நாடகா ஸ்பெஷல் போண்டா சூப் செய்வது எப்படி.? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

சென்னை :கர்நாடகா ஸ்பெஷல் போண்டா  சூப் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; உளுந்து…

59 minutes ago

மன்னராட்சி மன நிலைக்கு மக்கள் முடிவு கட்டுவார்கள் – அண்ணாமலை காட்டம்!

சென்னை : பொங்கல் பண்டிகையொட்டி பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு…

2 hours ago

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! 8வது ஊதிய கமிஷனுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி : மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியம், அலவன்ஸ், ஓய்வூதியம் உள்ளிட்ட மற்ற சலுகைகள் தொடர்பான முடிவுகள் பற்றி ஆய்வு…

2 hours ago

‘இந்தியன் 3 வேலை ஆரம்பிக்கப்போறோம்’…இயக்குநர் ஷங்கர் கொடுத்த அப்டேட்!

சென்னை : நம்ம பிரமாண்ட இயக்குநர் ஷங்கருக்கு என்னதான் ஆச்சு? என்கிற வகையில், தொடர்ச்சியாக அவர் இயக்கும் படங்கள் தோல்வி அடைந்து…

2 hours ago

மாட்டுப் பொங்கல் 2025 : வித்தியாசமாக போடப்பட்ட கோலங்கள்!

சென்னை : தைப்பொங்கல் நாளின் மறுநாள் மாட்டுப்பொங்கல் பண்டிகை தமிழர்களால் கொண்டாட்டப்பட்டு வருகிறது. இந்த நாளில் உழவர்களின் நண்பனாக திகழும்…

3 hours ago