சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் ₹4 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட, தமிழ்நாட்டின் முதல் மரபணு பகுப்பாய்வு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழகத்தில் டெல்ட்டா பிளஸ் வைரஸை கண்டறியும் ஆய்வகத்தை அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்த நிலையில், ரூ.4 கோடி செலவில் சென்னையில் மரபணு ஆய்வகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான ஆய்வு கருவிகளும் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் ₹4 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட, தமிழ்நாட்டின் முதல் மரபணு பகுப்பாய்வு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் 91 இளநிலை உதவியாளர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கினார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் உருமாற்றத்தை கண்டறிய 11-வது ஆய்வகமாக சென்னை ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது. நவீன கருவிகளைக் கொண்ட இந்த ஆய்வகத்தில், பெங்களூரில் பயிற்சி முடித்த ஆறு 6 பேர் உள்பட 10 குழுவினர் பணியாற்ற உள்ளனர். ஒரே நேரத்தில் ஆயிரம் மாதிரிகளை பரிசோதனை செய்வதற்கான திறன் சென்னை ஆய்வகத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல்…
சென்னை: கனமழை காரணமாக பூண்டி ஏரி வேகமாக நிரம்பி வரும் நிலையில் இன்று மதியம் 1.30 மணிக்கு திறக்கப்படுகிறது. 35 அடி…
கோட்டயம் : இன்று கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் வைக்கத்தில் வைக்கம் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு…
திருவள்ளூர்: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விடிய காலை பெய்ய தொடங்கிய…
சென்னை: கடந்த மூன்று தினங்களாக ஏற்றம் கண்டு வந்த தங்கம் விலை, இன்றைய தினம் (டிச.,12) எந்தவித மாற்றமின்றி விற்பனை…
சென்னை: சூப்பர் ஸ்டார்ப்பி ரஜினிகாந்த் இன்று தனது 74ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தனது 74 வயதில் 50 ஆண்டு சினிமா…