தமிழ்நாட்டின் முதல் மரபணு பகுப்பாய்வு மையத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் ₹4 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட, தமிழ்நாட்டின் முதல் மரபணு பகுப்பாய்வு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழகத்தில் டெல்ட்டா பிளஸ் வைரஸை கண்டறியும் ஆய்வகத்தை அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்த நிலையில், ரூ.4 கோடி செலவில் சென்னையில் மரபணு ஆய்வகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான ஆய்வு கருவிகளும் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் ₹4 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட, தமிழ்நாட்டின் முதல் மரபணு பகுப்பாய்வு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் 91 இளநிலை உதவியாளர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கினார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் உருமாற்றத்தை கண்டறிய 11-வது ஆய்வகமாக சென்னை ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது. நவீன கருவிகளைக் கொண்ட இந்த ஆய்வகத்தில், பெங்களூரில் பயிற்சி முடித்த ஆறு 6 பேர் உள்பட 10 குழுவினர் பணியாற்ற உள்ளனர். ஒரே நேரத்தில் ஆயிரம் மாதிரிகளை பரிசோதனை செய்வதற்கான திறன் சென்னை ஆய்வகத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025