தஞ்சை துணை மேயரின் குழந்தைக்கு கருணாநிதி என பெயர்சூட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் அஞ்சுகம் பூபதி நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் 51-வது வார்டில் போட்டியிட்டார். இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், தேர்தல் பணிக்காக சுறுசுறுப்பாக பணிகளுடன் தொடர்ந்து வாக்காளர்களை நேரில் சந்தித்து, திமுக ஆட்சியின் சாதனைகள் குறித்து மக்களுக்கு எடுத்துரைத்தார்.
இந்த நிலையில், கடந்த 19-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவருக்கு, கடந்த 12ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தஞ்சாவூர் மாநகராட்சியின் துணை மேயராக அவர்களுக்கு பொறுபேற்று கொண்டுள்ளார். இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அவரது குழந்தையை நேரில் சந்தித்து அக்குழந்தைக்கு கருணாநிதி எனப் பெயர் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், எங்கள் குழந்தைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு தளபதி அவர்கள் சற்று முன் கருணாநிதி என பெயர் சூட்டினார். எங்கள் குடும்பத்தில் சாதி முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் நன்றி. என பதிவிட்டு இருந்தார்.