தமிழக விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின்!

Default Image

தமிழக விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.3.98 கோடி ஊக்கத்தொகை வழங்கினார்.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழகத்தை சேர்ந்த தடகள வீரர்கள் உள்ளிட்ட 15 பேருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கினார். அதன்படி, பாராலிம்பிக், ஃபிடே உலக சதுரங்க ஆன்லைன் ஒலிம்பியாட் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு ரூ.3.98 கோடி ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மாரியப்பன், விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்டோருக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. ஏற்கனவே, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கு முன்பகாவே விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.5 லட்சம் வழங்கிய நிலையில், தற்போது மேலும் வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக ஊக்கத்தொகையை முதலமைச்சர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில்விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் விளையாட்டு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்