புகைப்பட செய்தியாளர் ஜேக்கப் ஸ்டாலின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
புகைப்பட செய்தியாளர் ஸ்டாலின் ஜேக்கப் என்பவர் நேற்று செங்கல்பட்டு , மறைமலை நகர் அருகே தனது நண்பருடன் பைக்கில் வந்து கொண்டிருக்கையில், கார் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயமுற்று செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.
ஜேக்கப் மறைவு : ஆனால், சிகிச்சை பலனின்றி ஸ்டாலின் ஜேக்கப் மற்றும் அவரது நண்பர் உயிரிழந்துவிட்டனர். ஸ்டாலின் ஜேக்கப் உயிரிழப்புக்கு பலரும் தங்கள் இரங்கலை இணையத்திலும் நேரிலும் செலுத்தி வருகின்றனர். அவருக்கு மார்ச் 2ஆம் தேதி (நேற்று முன்தினம்) தான் பிறந்தநாள் என்பது சோகமான செய்தி.
முதல்வர் இரங்கல் : ஸ்டாலின் ஜேக்கப் மறைவு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் கழகத்தின் துடிப்பான செயல்வீரர் மறைவு அதிர்ச்சியளிக்கிறது என குறிப்பிட்டார். மேலும் , அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உடன்பிறப்புகளுக்கு தனது ஆறுதல், ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவித்து கொள்வதாக பதிவிட்டுள்ளார்.
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…