சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவிக் கேட்ட சிறுமியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முதல்வர்…!
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவிக் கேட்ட சிறுமியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சேலம் மாவட்டம், அரிசிப்பளையம் பகுதியை சேர்ந்த விஜயக்குமார்-ராஜலட்சுமி தம்பதியின் மகள் ஜனனி (14). இவர் சிலம்பம், வில்வித்தை, ஸ்கேட்டிங் போன்ற போட்டிகளில் மாநில அளவில் பரிசுகளை வென்றுள்ளார். இவருக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இச்சிறுமிக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், தந்தை கைவிட்ட நிலையில், தாயின் உதவியுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக டயாலிசிஸ் செய்து வருகிறார்.
இதனையடுத்து, முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உதவிடுமாறு பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது தாயார் கோரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்ட நிலையில், நேற்று பாதிக்கப்பட்ட சிறுமிக்கு முதல்வர் ஸ்டாலின் அலைபேசியில் அழைத்து ஆறுதல் கூறினார்.
இதையடுத்து, சென்னை ஸ்டாண்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த சிறுமியை முதல்வர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதனை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவிக் கேட்டு வேண்டுகோள் விடுத்த சேலம் சிறுமி ஜனனியை நேற்று செல்போனில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறிய நிலையில் இன்று ஸ்டான்லி மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். #மனிதநேயமுதல்வர் pic.twitter.com/R8Tzb61TAC
— P.K. Sekar Babu (@PKSekarbabu) September 27, 2021