MK Stalin: மக்களவை தேர்தலை முன்னிட்டு இன்று தஞ்சை மற்றும் நாகையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்தவரை 34 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் வலுவான கூட்டணியாக இருக்கும் திமுக அதன் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் பட்டியல் வெளியீடு என முதல் கட்சியாக நிறைவு செய்தது. அதன்படி, திமுக நேரடியாக 21 தொகுதிகளில் களமிறங்க உள்ள நிலையில், காங்கிரஸ் 10, இரு கம்யூனிஸ்ட்கள், விசிக கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளிலும், மதிமுக, முஸ்லீம் லீக் உள்ளிட்ட ஒருசில தலா ஓரு தொகுதிகள் என கூட்டணி கட்சிகளும் 19 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, திமுக உட்பட அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். அந்தவகையில், மக்களவை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் மேற்கொள்ளும் தேர்தல் பிரச்சாரம் தொடர்பான அட்டவணையும் வெளியிடப்பட்டது. அதன்படி, நேற்று திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கினார்.
அப்போது, பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண் நேரு, திருச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ உள்ளிட்டோரை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த நிலையில், இன்று தஞ்சை, நாகை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்
அதன்படி, தஞ்சையில் இன்று காலை சாலையில் நடந்து சென்று திமுக வேட்பாளர் முரசொலியை ஆதரித்து வாக்கு சேகரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று மாலை தஞ்சையில் நடக்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு வேட்பளர்களை அறிமுகம் செய்துவைத்து உரையாற்றுகிறார். இதனைத்தொடர்ந்து, நாகப்பட்டினம் தொகுதிகளிலும், நாளை மறுநாள் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி தொகுதிகளிலும் முதல்வர் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…