விஜயகாந்த் நலம் பெற முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!

Default Image

தேமுதிக தலைவர் அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் முழு உடல்நலன் பெற்று தனது அரசியல் பணிகளை மேற்கொள்ள விழைகிறேன் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விஜயகாந்த் பொது நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்துகொள்வதில்லை, தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கூட மக்களிடம் வாக்கு சேகரிக்கும் போது, கைகளை மட்டுமே அசைத்து வாக்கு சேகரித்தார்.

இதற்கிடையில், இன்று அதிகாலை 3 மணியளவில், விஜயகாந்திற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டரில் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் முழு உடல்நலன் பெற்று தனது அரசியல் பணிகளை மேற்கொள்ள விழைகிறேன் என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்