சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ள எழுத்தாளர் அம்பைக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்து ட்வீட்.
2021-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் அம்பைக்கு “சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை” என்ற சிறுகதைக்காக அறிவிக்கப்பட்டது. தமிழின் சிறந்த பெண் படைப்பாளிகளில் ஒருவரான அம்பை 1960-லிருந்து எழுதி வருகிறார். இதுபோன்று எழுத்தாளர் மு.முருகேஷ்க்கு அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை என்ற சிறுகதை தொகுப்புக்காக பால புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ள எழுத்தாளர் அம்பை மற்றும் மு.முருகேஷ்க்கு வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் மு. க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தனது ‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’ என்ற சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் அம்பைக்கு வாழ்த்துகள்.
தமிழில், பல ஆண்டுகளுக்குப் பின் பெண் எழுத்தாளருக்கு விருது அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். பெண் படைப்பாளிகளுக்கு இது மேலும் ஊக்கமளிக்கட்டும் என்று தெரிவித்துள்ளார். இதுபோன்று, கவிஞர் மு.முருகேஷ் அவர்கள் ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ என்ற படைப்பிற்காக பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்றமைக்கு வாழ்த்துகள். சிறார்களுக்கான எளிய – இனிய படைப்புகள் தமிழில் செழித்திட இந்த விருது ஊக்கம் அளிக்கட்டும் என்றும் கூறியுள்ளார்.
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 16) முதல் வரும் நவம்பர் 21 வரையில் 6 நாள்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று முதல்…
திருவாரூர் : வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. திருவாரூரில் உள்ள தமிழ்நாடு…
சென்னை : பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் தொடர்புடைய பல்வேறு இடங்களில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி முதல் அமலாக்கத்துறையினர் …
சென்னை : நயன்தார விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் நவம்பர் 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது.…