பிவி சிந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
நம் அனைவரையும் பிவி சிந்து மீண்டும் ஒருமுறை பெருமை கொள்ள செய்துள்ளார் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் ட்வீட்.
ஸ்விட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பிவி சிந்து சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். ஸ்விட்சர்லாந்து தலைநகர் பேசல் நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் உலகின் 11-ம் நிலை வீராங்கனையான BUSANAN-ஐ பிவி சிந்து எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில், 21 – 16, 21 – 8 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி பிவி சிந்து பட்டம் வென்றார். இந்த சீசனில் சிந்து வெல்லும் இரண்டாவது பட்டம் இதுவாகும்.
முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் சையது மோடி சர்வதேச பாட்மின்டன் பட்டத்தை சிந்து வென்றிருந்தார் என்பது குறிப்பிடப்படுகிறது. இந்திய வீராங்கனை பிவி சிந்து சாம்பியன் பட்டம் வென்றதை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், பிவி சிந்துக்கு வாழ்த்து தெரிவித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தி பதிவிட்டுள்ள முதலமைச்சர், தனது ஆத்தியமிக்க அபார ஆட்டத்தால் ஸ்விஸ் ஓப்பன் 300 இறகுப்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டியில் வென்று நம் அனைவரையும் பிவி சிந்து மீண்டும் ஒருமுறை பெருமை கொள்ள செய்துள்ளார். இது இப்பருவத்தில் ஒற்றையர் பிரிவில் அவர் கைப்பற்றியுள்ள இரண்டாவது தொடராகும். அவர் மென்மேலும் வெற்றிகளை குவித்து நமது இளைஞர்களுக்கு உந்துவிசையாக விளங்க என வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
Once again, our ace shuttler @Pvsindhu1 has made us all proud by winning the #SwissOpen Super 300 badminton tournament and clinching her second singles title of the season with a dominating exhibition of her talent. I wish her many more wins and keep inspiring our youngsters. pic.twitter.com/lrBofufy0G
— M.K.Stalin (@mkstalin) March 28, 2022