இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!
டோக்கியோ ஒலிம்பிக்ஸில் விளையாடிய இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
கடந்த 4-ம் தேதி நடைபெற்ற ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதி போட்டியில் இந்திய மகளிர் அணி, அர்ஜென்டினாவை எதிர்கொண்டது. ஆனால், அரையிறுதி போட்டியின் முடிவில் 1-2 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதனைத்தொடர்ந்து வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் பிரிட்டன் அணியிடம் 4-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில், தமிழக முதல்வர் முகஸ்டாலின் தனது ட்விட்டரில் பதிவிட்ட பதிவில், பதக்கம் பெற்ற அணியை விட திறமையில் சற்றும் குறையாத அணி இந்திய மகளிர் ஹாக்கி அணி, ஒலிம்பிக்ஸில் முதல்முறையாக மகளிர் பிரிவில் இந்திய ஹாக்கி அரையிறுதி வரை முன்னேறியது. மகளிர் ஹாக்கி பிரிவில் இந்தியாவை முன்னேறச்செய்த நமது வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
The performance of the Indian Women’s #Hockey Team at #Tokyo2020 is no less than those that resulted in a medal. I congratulate each and every member of our team for taking India to the semi-finals for the first time in #Olympics and for their undaunting efforts till the end. pic.twitter.com/N8NGZZJ4DH
— M.K.Stalin (@mkstalin) August 6, 2021