முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்.! தலைவர்கள் நினைவிடத்தில் மரியாதை.! பிரதமர் மோடி, கார்கே வாழ்த்து.!
MK Stalin : தமிழக முதலமைச்சரும், திராவிட முன்னேற்ற கழக கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின், நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள் என ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார்.
Read More – 7.72 லட்சம் மாணவர்கள்., 3,300 தேர்வு மையங்கள்… இன்று தொடங்கும் +2 பொதுத்தேர்வு.!
அதே போல காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது பிறந்தநாளை முன்னிட்டு காலையில் சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர்கள் அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோர் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார். அதன் பிறகு, வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.
Read More – பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து
தலைவர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்பு, திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு சென்றுள்ளார். அங்கு தமிழகம் முழுவதில் இருந்து வந்துள்ளன திமுக தொண்டர்கள் முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் திமுகவினர் சிறப்பு பொதுக்கூட்டம், நடத்திட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.