முதல்வர் பொறுப்பேற்றுள்ள மு.க ஸ்டாலின், கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கலைஞர் படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மாளிகையில் தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 33 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். இவர்களுக்கு தமிழக ஆளுநர்பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை உடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்ட பின்னர் பதவியேற்பு நிகழ்ச்சி நிறைவுபெற்றது. ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி இல்லத்துக்கு சென்று கலைஞர் படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது, தயாரிடமும் ஆசி பெற்று முக ஸ்டாலின் கண்கலங்கினார். இதன்பின் மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடம் மற்றும் அண்ணா நினைவிடம் சென்று மலர்த்தூவி மரியாதை செலுத்திய பின் தலைமை செயலகத்துக்கு சென்று மூன்று முக்கிய கோப்புகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெடுத்திட உள்ளார். இதனிடையே, முதல்வராக முக ஸ்டாலின் பதவியேற்றத்தை அடுத்து திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…