7ஆம் தேதி அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என தற்போதைய முதலமைச்சர் பழனிசாமி,துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இடையே வெளிப்படையான மோதல் வெடித்துள்ளது.அண்மையில் நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்திற்கு நாளை மறுநாள் (அக்டோபர் 7-ஆம் தேதி ) முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
இதனையடுத்து தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் , துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வமும் தனது ஆதரவாளர்களுடன் தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தினர். 3 நாட்களாக தேனியில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில் இன்று சென்னைக்கு புறப்படுவதாக செய்தியாளர்களிடம் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே இன்று காலை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவில் ,தமிழக மக்கள் மற்றும் அஇஅதிமுக கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது! எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!! எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் என்று சூசகமான ட்விட்டை பதிவிட்டார்.
இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன், ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி.உதயகுமார், சி.வி.சண்முகம், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…