பொது போக்குவரத்து சிறப்பாக இருந்தால், வாகன நெரிசல், சுற்றுசூழல் மாசு குறையும்.! – முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து.!
பொது போக்குவரத்தை சிறப்பாக கட்டமைகிறோமோ, அந்தளவுக்கு தனியார் வாகனங்களின் எண்ணிக்கை குறையும். போக்குவரத்து நெரிசல் குறையும். சுற்றுசூழல் மாசு குறையும். – முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை.
சென்னையில் ஒருங்கிணைந்த பெருநகர் போக்குவரத்துக்கு குழும ஆலோசனை கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். நகர்ப்புற அமைச்சர் முத்துசாமி, போக்குவரத்துறை அமைத்ச்சர் சிவசங்கர் மற்றும் மற்ற நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், சென்னை மாநகர் போக்குவரத்து நெரிசல் குறித்து பேசினார். அப்போது, சென்னை நகர போக்குவரத்து நெரிசல் பற்றி நாம் அறிந்தது தான். அதற்காக நாம் சரியாக திட்டமிட வேண்டும். புது புது டெக்னாலஜியை பயன்படுத்த வேண்டும். என குறிப்பிட்டார்.
மேலும், எந்தளவுக்கு பொது போக்குவரத்தை சிறப்பாக கட்டமைகிறோமோ, அந்தளவுக்கு தனியார் வாகனங்களின் எண்ணிக்கை குறையும். போக்குவரத்து நெரிசல் குறையும். சுற்றுசூழல் மாசு குறையும். அதனால் திட்டமிட்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் பொது போக்குவரத்தை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். மாணவர், மாணவியர் பள்ளி , கல்லூரி செல்லும் நேரத்தை கணக்கிட்டு காலையிலும், மாலையிலும் அதிக பேருந்துகள் செல்லும் வகையில் திட்டமிட வேண்டும். எனவும் அந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.