12 மீனவர்களை விடுவிக்க கோரி பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்…!
12 மீனவர்களை விடுவிக்க கோரி பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த ஏழு மீனவர்கள் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த ஐந்து மீனவர்கள் உட்பட 12 இந்திய மீனவர்கள் நேற்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படங்களையும் விடுவிக்க வலியுறுத்தி மத்திய வலியுறுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் 15-6-2022 அன்று 61 நாட்கள் மீன்பிடி தடை காலத்திற்கு பின் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க தொடங்கிய நிலையில், 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள இந்த சம்பவம் தமிழக மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. இந்த சம்பவம் மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பின்மையை ஏற்படுத்துவதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ள தமிழக முதல்வர், இலங்கை சிறைபிடிக்கப்பட்டுள்ள 12 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப்படையினையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய தூதரக வழிமுறைகள் வாயிலாக விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம்#CMMKSTALIN #TNDIPR @CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/NDksRohmQb
— TN DIPR (@TNDIPRNEWS) July 4, 2022