சேலம் ஈரடுக்கு பேருந்து நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு…!
முதல்வர் மு.க.ஸ்டாலின் சேலம் ஈரடுக்கு பேருந்து நிலையத்தில் ஆய்வு
கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ், தமிழக அரசால் கொண்டுவரப்படும் திட்டங்கள் அனைத்தும் எவ்வாறு செய்லபடுகின்றன என்பது குறித்து களத்தில் முதல்வரால் நேரடியாக ஆய்வு செய்யப்படுகின்றன.
கள ஆய்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
அந்த வகையில், இந்த திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் ஆய்வு நடைபெற்றது. இதனை தொடர்ந்து 2-வது கட்டமாக, சேலம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
ஈரடுக்கு பேருந்து நிலையம்
இந்த நிலையில், கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் சேலத்தில் முதல்வர் இன்று ஆய்வு மேற்கொண்டார். அதன்படி, ஓமலூரில், உள்ள தனி வட்டாச்சியர் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து, சேலம் ஈரடுக்கு பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.