ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்!!

armstrong

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார். 

பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 5) அன்று பெரம்பூர் பகுதியில் மர்ம கும்பலால்  வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் இந்த சம்பவம் தங்களுடைய கண்டனங்களை பதிவுசெய்து வருகிறார்கள்.

சில அரசியல் தலைவர்கள் பலரும் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் வீட்டிற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு சென்று ஆம்ஸ்ட்ராங் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதலை கூறியுள்ளார். பிறகு அங்கிருந்த ஆம்ஸ்ட்ராங் உருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

மேலும், இந்த கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் சென்னை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் 8 பேர் இந்த கொலை தொடர்பாக சரணடைந்ததாக கூறப்படுகிறது. இந்த கொலை தொடர்பான உண்மை நிலைகளை கண்டறிய தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்