சச்சினுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

Default Image

50வது பிறந்தநாளை கொண்டாடும் சச்சின், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள் என முதலமைச்சர் ட்வீட்.

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் இன்று (ஏப்.24) 50ஆவது வயதில் அடியெடித்து வைக்கிறார். கிரிக்கெட்டில் எண்ணற்ற சாதனைகளை புரிந்து இன்றைய இளம் வீரர்களுக்கு சிறந்த உத்வேகமாக இருக்கும் சச்சின், God of Cricket என அழைக்கப்படுகிறார். இந்த சமயத்தில் சச்சின் பிறந்தநாளை யொட்டி, உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் சமூகவலைத்தளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கருக்கு 50வது பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவில், தங்களுக்கு மகிழ்ச்சி, அமைதி, நல்ல ஆரோக்கியம் நிலவட்டும், 50வது பிறந்தநாளை கொண்டாடும் சச்சின், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்