நரிக்குறவர் மக்களுக்குப் பழங்குடியினர் தகுதி வரவேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்
நரிக்குறவர் மக்களுக்குப் பழங்குடியினர் தகுதி வழங்கியிருக்கும் ஒன்றிய அரசின் முடிவிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்று ட்விட்டரில் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் விளிம்பு நிலையில் – அடிப்படை உரிமைகள் இன்றி நீண்ட காலமாக பாதிக்கப்பட்டிருந்த நரிக்குறவர் மக்களுக்குப் பழங்குடியினர் தகுதி வழங்கியிருக்கும் ஒன்றிய அரசின் முடிவினை தமிழ்நாடு அரசின் சார்பில் வரவேற்கிறேன்.
விளிம்புநிலையிலுள்ள அம்மக்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் சமூகநீதியைப் பெற்றுத் தருவதற்கான நீண்ட போராட்டத்தின் வெற்றி இது என்று தெரிவித்துள்ளார்.
நரிக்குறவர் மக்களை #ST பட்டியலில் சேர்க்க வேண்டுமெனக் கழக அரசும், எம்.பி.க்களும் மேற்கொண்ட தொடர் முயற்சிகளுக்கு ஒன்றிய அரசு இசைந்துள்ளதை வரவேற்கிறேன்.
விளிம்புநிலையிலுள்ள அம்மக்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் சமூகநீதியைப் பெற்றுத் தருவதற்கான நீண்ட போராட்டத்தின் வெற்றி இது! pic.twitter.com/qqc8WoprSL
— M.K.Stalin (@mkstalin) September 14, 2022