தமிழ்நாடு சட்டப்பேரவையில் கூட்டத்தொடர் மூன்றாவது நாளான இன்று நடைபெற்று வருகிறது. இன்று கூட்டத்தொடர் தொடங்கியதும் கேள்வி, பதில் நேரம் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர். இதில், நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சி உள்பட பல்வேறு கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியும் வந்தனர்.
இதன்பின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் முதல்வர் பதிலுரை ஆற்றினார். அப்போது கூறியதாவது, தமிழ்நாட்டு மக்களுக்காக ஒவ்வொரு நாளுன் சிந்தித்து செயல்படுகிறேன். அரசின் உரையை அப்படியே வாசிக்க வேண்டியது ஆளுநரின் கடமை. ஆளுநர் அவரது அரசியலுக்காக சட்டப்பேரவையை பயன்படுத்திக்கொண்டார். இதுபோன்ற சிறு பிள்ளை விளையாட்டுகளை கண்டு பயந்துவிட மாட்டோம் எனவும் தெரிவித்தார்.
சென்னை வரும் தலைமை தேர்தல் ஆணையர்..!
இதனிடையே, மெட்ரோ திட்டம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்து முதலமைச்சர் கூறியதாவது, மெட்ரோ ரயில் வேண்டாம் என்று கூறி மோனோ ரயில் கேட்டவர்கள் தற்போது மெட்ரோ பற்றி பேசுவது மகிழ்ச்சி தருகிறது. பாஜக கூட்டணியில் இருந்தவரை வாயை திறக்காத எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தற்போதாவது பேசுவது ஆறுதல் தருகிறது.
மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்கு அதிமுக ஆட்சியில் முனைப்பு காட்டவில்லை. மெட்ரோ ரயில் திட்ட 2-ம் கட்ட பணிகளுக்கு மத்திய அரசு நிதி வழங்காததால் மாநில அரசின் நிதியில் இருந்து பணி மேற்கொள்ளப்படுகிறது. எதிர்க்கட்சி தலைவர் எங்களோடு சேர்ந்து மத்திய அரசிடம் இருந்து நிதி பெற குரல் கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேரவையில் தெரிவித்தார்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…