“தமிழ்நாட்டில் எந்த விதத்திலும் மதவாதம் நுழைய முடியாது” – முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்.!
தமிழ்நாட்டில் பயங்கரவாதம் இருப்பதாக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கூறியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய 9 அறிவிப்புகளை அறிவித்தார். அதன் பிறகு, பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தமிழ்நாட்டில் பயங்கரவாதம் இருப்பதாக கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டுக்குள் எந்த ரூபத்திலும் மதவாதம் உள்ளே நுழைய முடியாது. மத பயங்கரவாதம் எங்கு உள்ளது என கூறுங்கள்? பொத்தாம் பொதுவாக கூறக் கூடாது. கோவையில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களில் என்ன நடக்கிறது என உங்களுக்கு தெரியும். பிரதமர் மோடி இன்னும் மணிப்பூருக்கு செல்லவில்லை” என்று பதிலளித்தார். இதையடுத்து, ஒன்றிய அரசின் பாதுகாப்பு குறைபாடு பற்றி நாங்கள் பேசவில்லை என்று வானதி சீனிவாசன் கூற, ‘காஷ்மீர் சம்பவத்தில் ஒன்றிய அரசின் பாதுகாப்பு குறைபாடு குறித்து இதுவரை நாங்கள் பேசவில்லை.
காஷ்மீர் விவகாரத்தில் ஒன்றிய அரசு எடுக்கக்கூடிய நடவடிக்கைக்கு தமிழ்நாடு அரசு உறுதுணையாக இருக்கும் என்றுதான் நாங்கள் சொல்லியிருக்கிறோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் கூறியுள்ளார். பின்னர், தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பாஜக எம்.எல்.ஏ வானதி குற்றச்சாட்டை முன்வைத்தார். இதற்கு, ”ராமாயணத்திலேயே பெண்ணை தூக்கிச் சென்றுவிட்டனர், எல்லா இடத்திலும் நல்லவர்கள் இருக்க முடியாது என துரைமுருகன் கூறினார்.
அதனை தொடர்ந்து, பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் கூறினார். இந்நிலையில், வானதிக்கு, கீதா ஜீவன் பதிலளித்ததை பார்த்து சபாஷ் சரியான போட்டி என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025
மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!
April 28, 2025