விசிக பொருளாளர் யூசுப் மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலப் பொருளாளர் முகமது யூசுப் மறைவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
விசிக பொருளாளர் முகமது யூசுப் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை மண்ணடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முகமது யூசுப் மறைவிற்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலப் பொருளாளர் திரு. முகமது யூசுப் அவர்கள் கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்த செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
அவரது மறைவு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் அன்புச் சகோதரர் திரு தொல். திருமாவளவன் அவர்களுக்கும். அந்த இயக்கத்தின் மற்ற தோழரிகள் அனைவருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
தகவலறிந்ததும் திரு. தொல். திருமாவளவன் அவர்களைத் தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினேன். திரு. முகமது யூசுப் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் வி.சி.க. தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
‘விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலப் பொருளாளர் திரு. முகமது யூசுப் அவர்கள் மறைவையொட்டி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி’ pic.twitter.com/ErAmF383z8
— DMK (@arivalayam) May 15, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
சின்ன டீம் கூடதான் விக்கெட் எடுப்பார் பெரிய டீம் கூட முடியாது! ரஷித் கானை விமர்சித்த இந்திய முன்னாள் வீரர்!
February 27, 2025
சினிமாவில் நடிச்சி சொத்து சேத்து வச்சிட்டு அரசியல் வராங்க! சிக தலைவர் திருமாவளவன் பேச்சு!
February 27, 2025
காலத்தால் அழியாத காதல் …15 ஆண்டுகளை கடந்த VTV…நடிகர் சிம்பு நெகிழ்ச்சி!
February 27, 2025