சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..!

அரசு முறைப்பயணமாக டெல்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், சோனியா காந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக்க தெரிவித்துள்ளார்.

Stalin - Soniya Gandhi

டெல்லி : நேற்று அரசு முறைப்பயணமாக டெல்லிச் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை பிரதமர் மோடியை சந்தித்தார். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் எனவும் இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தர தீர்வு என இது போன்ற கோரிக்கைகளை மனுவாக அளித்துள்ளார்.

அந்த மனுவை பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி, அதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுப்பதாகக் கூறி உறுதியளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் மறைந்த சீதாராம் யெச்சூரியின் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்ததுடன் சீதாராம் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதையையும் செய்தார்.

அதன் பிறகு அங்கிருந்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவி சோனியா காந்தியை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பிற்கு பின் பேட்டியளித்த மு.க.ஸ்டாலின், ‘மரியாதை நிமித்தமாக குழுத் தலைவி சோனியா காந்தியை சந்தித்தேன்’ என கூறியிருந்தார்.

இந்த சந்திப்பின்போது, திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் கனிமொழி எம்.பி ஆகியோர் உடனிருந்தனர். இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக டெல்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை டெல்லியில் இருந்து புறப்பட்டு மீண்டும் தமிழகம் திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

rajat patidar
russia ukraine war Donald Trump
PM Modi USA Visit
lyca vidamuyarchi
gold price
ceasefire in J&K