பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

mk stalin

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாட்டு மீனவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடவும். அவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்திடவும் உரிய தூதரக வழிமுறைகளைப் பின்பற்றி விரைவான, தீர்க்கமான நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். பிரதமர் மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், இலங்கைக் கடற்கடையினரால் தமிழ்நாடு மீனவர்கள் கைது மற்றும் மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் பல தலைமுறைகளாக இந்த மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவரும் தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதார உரிமைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பாஜக தேர்தல் அறிக்கை.. நாளை முதல் கருத்துக்கேட்பு..!

மீன்பிடித் தொழிலையே நம்பியுள்ள அவர்களின் கலாச்சார மற்றும் சமூகக் கட்டமைப்பிற்கு பெருத்த அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதையும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.  2023ம் ஆண்டில் இலங்கை கடற்படையினர் தமிழ்நாட்டைச் சேர்ந்த 243 மீனவர்களை கைது செய்ததுடன், 37 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

கடந்த 28 நாட்களில் மட்டும் 88 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் 12 மீன்பிடிப் படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, இலங்கை அரசைல் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடிப் படகுகளை விடுவித்திடவும்,  மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண கூட்டு நடவடிக்கைக் குழுவினை புதுப்பித்திடவும், உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்