Tamilnadu CM MK Stalin [File Image]
வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக வடதமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக புயல் கரையை கடக்கும் என கூறப்பட்ட சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் அதீத கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நிர்வாக காரணங்களுக்காக சென்னை சுற்றுவட்டார மாவட்டங்களில் 2 நாட்கள் ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.
நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க தமிழக அரசு பேரிடர் மேலாண்மை துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்த பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், கடந்த டிசம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் உடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
நெருங்கும் புயல்.! விபத்துக்கள் – அபாயம்.! பொதுமக்களுக்கு அரசின் கடும் கட்டுப்பாடுகள்…
தமிழகம் முழுவதும் 121 பல்நோக்கு பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. 4927 பாதுகாப்பு நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவள்ளூர், கடலூர், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களில் மீட்புப்படைகள் தயாராக உள்ளனர். 350 மீட்புப்படை வீரர்கள் 15 குழுக்களாக உள்ளனர். தேசிய பேரிடர் குழுக்களும் தயார் நிலையில் உள்ளனர்.
ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு எஸ்எம்எஸ் வாயிலாக முன்னெச்செரிக்கை செய்தி விடுக்கப்பட்டுள்ளது. வடமாவட்டங்களில் 11 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவசரகால கட்டுப்பாடு மையம், மின்சாரம் உட்பட அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளனர்.
அமைச்சர்கள் கே.என்.நேரு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தாமோ அன்பரசன், மூர்த்தி, காந்தி, முத்துசாமி என அமைச்சர்கள் எம்பிக்கள் மழை மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டார்.
சென்னை : சித்தா படத்தின் இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம்…
சென்னை : அவர்கள் , உல்லாசயாத்ரா மற்றும் பகலில் ஒரு இரவு போன்ற படங்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்ற மூத்த…
சென்னை : பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான நடிகர் தர்ஷஷனுக்கும் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் ஆதிசுடி என்பவருக்கும் இடையே பார்க்கிங்…
கொல்கத்தா : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : அதிரடி அணிக்கு என்ன ஆச்சுபா என்பது போல சமூக வலைத்தளங்களில் ஹைதராபாத் அணியை பார்த்து தான் பலரும்…
அமெரிக்கா : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தில் எலான் மஸ்க் தற்போது முக்கிய பங்கு வகித்து வருகிறார். அவர் "டிபார்ட்மெண்ட்…