அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனை வருகை.!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திக்க முதல்வர் ஸ்டாலின் வருகை.
அமலாக்கத்துறையினரின் 18 மணிநேர சோதனைக்கு பிறகு இன்று அதிகாலை தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்படும்போது நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து அறிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வந்து அவரை சந்தித்துவிட்டு சென்றுள்ளார். இதற்கிடையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்ய மருத்துவமனை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.