அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், மதுரையில் நடைபெற்ற பொன்விழா எழுச்சி மாநாடு, சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய ஒரு மாநாடு ஆகும். இதை போன்ற மாநாடு மீண்டும் தமிழகத்தில் நடக்க வேண்டுமென்றால் அது அதிமுகவால் மட்டும் தான் முடியும் என தெரிவித்துள்ளார்.
மாநாட்டிற்கு தேவையான முழுமையான பாதுகாப்பை காவல்துறை வழங்கவில்லை. சாப்பிட்டு விஷயத்தில் குறை ஏற்பட்டுள்ளது. இனி வருங்காலங்களில் இதுபோன்ற குறை ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்வோம்.
மேலும், திமுகவால் எப்போதும் அதிமுகவின் எழுச்சி, வளர்ச்சியை பொறுத்துக்க கொள்ள முடியாது. முதல்வர் ஸ்டாலின் பெரிய நடிகர். ஸ்டாலின் அப்பாவும் பெரிய நடிகர். உலக மகா பெரிய நடிகர்கள் தான் இவர்கள் குடும்பம். கிளிசரின் எடுத்துச் செல்ல மறந்ததால் கண்ணீர் வராமல் உதயநிதி நடிக்கிறார். 2024-ல் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் நீட் ரத்து செய்யப்படும் என திமுக நாடகமாடுகிறது என தெரிவித்துள்ளார்.
கட்சியில்லாத ஓபிஎஸ் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்துவதை பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை. அதுவும் அவரை பற்றி உலகத்துக்கே தெரியும், அவர் ஜமுக்காலத்தில் வடிகட்டப்பட்ட கஞ்சன் என்று என விமர்சித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. நேற்று மதுரை மாவட்டம் அவனியாபுரம்…
தெலுங்கானா : மாநிலம் ஹைதராபாத் - வாரங்கல் நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை நடந்த ஒரு துயரமான சாலை விபத்து சம்பவத்தில் 2…
பீதர்: கர்நாடகா மாநிலம் பீதர் மாவட்டத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தில் நிரப்பப் பணம் எடுத்துச் சென்றவர்கள் மீது பட்டப்பகலில் மர்ம நபர்கள்…
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 'வணங்கான்' திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.…
டெல்லி : அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் 8…
சென்னை: விடாமுயற்சி பொங்கல் பண்டிகை ரிலீஸில் இருந்து தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட்டை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். ஒரு…