முன்னாள் தலைமைச் செயலாளர் சபாநாயகம் திருவுருவப் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை..!

floral tributes

முன்னாள் தலைமைச் செயலாளர் சபாநாயகம் திருவுருவப் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அண்மையில் தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமை செயலாளர் சபாநாயகம் தனது 101-வது வயதில் உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து, பெருந்தலைவர் காமராஜர், தமிழினத் தலைவர் கலைஞர் உள்ளிட்ட முதலமைச்சர்களுடன் பணியாற்றிய நூற்றாண்டு நாயகர், முன்னாள் தலைமைச் செயலாளர் சபாநாயகம் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன் என்று  அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைந்த முன்னாள் தலைமைச் செயலாளர் சபாநாயகம் அவர்களின் சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள இல்லத்திற்கு நேரில் சென்று அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

இதில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, சட்டமன்ற உறுப்பினர் த. வேலு ஆகியோர் உடனிருந்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்