முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்விற்காக 3 மாவட்டங்களுக்கு பயணம்..!
முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் 3 மாவட்டங்களில் கள ஆய்வு பணிகளை மேற்கொள்ள உள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒவ்வொரு மாவட்டமாக கள ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் வரும் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் 3 மாவட்டங்களில் கள ஆய்வு பணிகளை மேற்கொள்ள உள்ளார்.
அதன்படி, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கள ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. அதன்படி இரண்டு நாட்களும் காவல்துறை உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஆகியோருடன் கள ஆய்வு கூட்டம் நடத்த உள்ளார்.