“பகல் கனவு பலிக்காது ஸ்டாலின் அவர்களே.,” இபிஎஸ் பதில் விமர்சனம்.!
திமுக செல்வாக்கு உயர்ந்துள்ளதாக மு.க.ஸ்டாலின் தான் பகல் கனவு காண்கிறார் என எடப்பாடி பழனிசாமி சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியுள்ளார்.
சேலம் : திமுக கூட்டணி உடைந்து விடும், திமுக செல்வாக்கு சரிந்துள்ளது என்று எடப்பாடி பழனிச்சாமி பகல் கனவு காண்கிறார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னர் விமர்சனம் செய்திருந்தார். இந்த விமர்சனத்திற்கு பதில் அளிக்கும் விதமாக இன்று சேலத்தில் நடைபெற்ற காட்சிக்கூட்டத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
அவர் கூறுகையில், ” ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து மாநிலத்தின் முதலமைச்சராக முடியும் என்றால் அது அதிமுகவில் மட்டுமே சாத்தியம். அதற்கு உதாரணம் நான். அதேபோல திமுகவில் ஸ்டாலினுக்கு பிறகு முதலமைச்சராக அவர் குடும்பத்தை தாண்டி யாரேனும் வருவார்கள் என்று கூற முடியுமா.? அப்படி கூறினால் திமுகவினர் அவர்களை விட்டு வைப்பார்களா.? அதிமுகவில் உழைப்பவர்களுக்கு தான் மரியாதை.
எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக அழிந்துவிடும் என்று கலைஞர் கனவு கண்டார். அது கானல்நீராக மாறிவிட்டது. புரட்சி தலைவர் எம்ஜிஆருக்கு பிறகு ஜெயலலிதா அதிமுகவை வலிமைப்படுத்தினார். இரு பெரும் தலைவர்கள் இயக்கத்தை கட்டி காத்தார்கள்.
எம்ஜிஆருக்கு வாரிசு கிடையாது. ஜெயலலிதாவுக்கு வாரிசு கிடையாது .அவர்களின் வாரிசாக மேடையில் அமர்ந்திருக்கும் இவர்களும், மேடைக்கு முன் நீங்களும் இருக்கிறீர்கள். அவர்கள் கொடுத்த கொடை அண்ணா திமுக கட்சி. அவர்கள் மக்களை வாரிசாக எடுத்துக் கொண்டு ஆட்சி நடத்தினார்கள். அதனால் மக்களுக்கு நன்மைகள் நடந்தது. அதனால் இந்தியாவில் உயர்ந்து நிலைக்கு தமிழகம் சென்றுள்ளது.
அதிமுக தமிழ்நாட்டில் 30 ஆண்டு காலம் ஆட்சி செய்தது. எம்ஜிஆர் கட்சி தொடங்கிய பிறகு அதிமுக இதுவரை 11 சட்டமன்ற தேர்தலை சந்தித்துள்ளது. அதில் 7 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அப்படி ஒரு வலிமையான கட்சி அதிமுக.
நேற்று, முதலமைச்சர் ஸ்டாலின், நான் கனவு காண்பதாக கூறுகிறார். நான் கனவு காணவில்லை. ஸ்டாலின் தான் பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார். பகல் கனவு பலிக்காது ஸ்டாலின் அவர்களே., அதிமுக தான் சரிந்திருக்கிறது திமுக செல்வாக்கு பெற்றிருக்கிறது என கூறுகிறார். நேற்று அவர் பேசிய நாமக்கல் தொகுதியில் 2019 தேர்தலில் அதிமுக 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி பெற்றது. ஆனால் 2024இல் 30 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டது அதிமுக. இப்போது கூறுங்கள் யாருக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது என்று. உண்மையில் திமுக வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. அதிமுகவுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது.” என எடப்பாடி பழனிச்சாமி