தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெற்றது. இளைஞர் அணி தொடங்கப்பட்ட பிறகு முதல் மாநாடு கடந்த 2007-ம் ஆண்டு நெல்லையில் நடந்த நிலையில் தற்போது 2-வது மாநாடு சேலத்தில் நடக்கிறது. மாநாட்டில், 25 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்ட நிலையில் அதை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேடையில் வாசித்தார். தொடர்ந்து உதயநிதி, கனிமொழி உள்ளிட்டோர் மேடையில் உரையாற்றினார்.
இதனை தொடர்ந்து மாநில மாநாட்டில் முதல்வர் மு.க ஸ்டாலின் நிறைவுப் பேருரையாற்றினார். அவர் பேசுகையில், “தெற்கில் விடியல் பிறந்தது போல விரைவில் இந்தியா முழுவதும் விடியல் பிறக்கும் உதயநிதி மக்கள் பணிகளில் எனக்கு துணையாக இருக்கிறார், எனக்கு 30 வயதாக இருக்கும் போது இளைஞரணி கட்சியில் அமைக்கப்பட்டது. தற்போதும் வீறுகொண்டு சிறப்பாக செயல்படுகிறது.
இளைஞரணி மீது எனக்கு எப்போதும் தனி பிரியம் உண்டு. அது தான் என்னை இந்த தாய் தமிழ்நாட்டை ஆள உதவியிருக்கிறது, நான் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்க காரணம் என்னை சுற்றி எப்போதும் இளைஞர்கள் இருப்பது. இளைஞரணி தம்பிமார்களே நீங்களும் நாளை எம்.எல்.ஏவாகவும், அமைச்சர்களாவும், மாவட்ட செயலாளர்களாகவும் வர வேண்டும்.
இளைஞரணி மாநாட்டில் வீர வாள், கேடயத்தை வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
ஒரு காலத்தில் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர்தான் பிரதமர் மோடி ஆனால் தற்போது மாநிலங்களை மொத்தமாக ஒழித்துக் கட்டும் முயற்சியில் பிரதமர் ஈடுபட்டு வருகிறார். மாநில அதிகாரங்களுக்கு உட்பட்டவைகளுக்கும் மத்திய அரசு சட்டம் இயற்றி வருகிறது. எந்த சட்டத்தை கொண்டு வந்தாலும் மாநில முதலமைச்சர்களிடம் ஆலோசனை கேட்பதில்லை என கூறினார்.
சமீபத்தில் ஏற்பட்ட பேரிடரின் போது 37000 கோடி பணம் கேட்டிருந்தோம். ஆனால் இதுவரை ஒரு பைசா கூட வரவில்லை. பிரதமர் வந்தார் தருவேன்னு சொன்னார், நிதியமைச்சர் வந்தார் தருவேன்னு சொன்னார், பாதுகாப்பு துறை அமைச்சர் வந்தார் தருவேன்னு சொன்னார் இப்ப வரைக்கும் ஒன்னும் வரல, 40-ம் நமதே, நாடும் நமதே என்ற முழக்கத்துடன் நாளை முதல் புறப்படுங்கள், நம்முடைய நோக்கம் இந்தியா கூட்டணியை வெல்ல வைப்பது.
உதயநிதி மட்டுமல்ல நீங்கள் அனைவருமே என் மகன் தான், உங்கள் அனைவரையும் கட்சியின் வாரிசுகளாகவே பார்க்கிறேன். சேலத்தில் சூளுரைப்போம், இந்தியா கூட்டணி வெல்லட்டும்” என பேசினார்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…