இன்று வடசென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கும் மிக பெரிய ‘மின்’ திட்டம்.!
MK Stalin – மக்களவை தேர்தல் தொடங்க இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள், ஆளும் மத்திய மாநில அரசுகள் தேர்தல் வேலைகளில் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டால் புதிய திட்டங்களை அறிவிக்கவோ, செயல்படுத்தவோ தேர்தல் விதிகளில் அனுமதியில்லை.
Read More – மநீம நிர்வாகிகள் கூட்டம் ஒத்திவைப்பு.. கமலின் பயணம் ரத்து? காரணம் இதுதானா?
அதனால், பிரதமர் மோடி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார். அதே சமயம், முதல்வர் மு.க.ஸ்டாலினும் பல்வேறு திட்டங்களை துவங்கி வைத்து வருகிறார்.
இன்று மாலை வடசென்னையில் புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைக்கிறார். வடசென்னை பகுதியில் ஏற்கனவே இயங்கி வரும் அனல் மின் நிலையத்தில் புதியதாக கட்டமைக்கப்பட்டுள்ள மூன்றாவது நிலை மிக உய்ய அனல்மின் நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைக்க உள்ளார்.
Read More – கரும்பு விவசாயி தான் வேணும்.. உச்சநீதிமன்றம் சென்ற நாம் தமிழர்.!
மொத்தம் 10,158 கோடி ரூபாய் செலவீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே உள்ள அனல்மின் நிலையத்தின் மூலம் மொத்தம் 1830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்த புதிய அனல் மின் நிலையத்தில் கூடுதலாக 800 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
Read More – மக்களவை தேர்தலில் போட்டியிட பாஜகவுடன் கைகோர்த்தார் சரத்குமார்!
நாட்டிலேயே முதன்முறையாக குறைவான அளவு நிலக்கரியை கொண்டு அதிக அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் நவீன தொழில்நுட்பங்களுடன் இந்த புதிய அனல் மின் நிலையம் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதன் மூலம் தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இன்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய அனல் மின் நிலையத்தை திறந்து வைக்க உள்ளார்.