மத்திய அரசு மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

Default Image

தேசிய கல்விக் கொள்கை, காவி கொள்கையாக உள்ளது என திருவனந்தபுரம் சிபிஐ மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை.

திருவனந்தபுரம் CPI 24-ஆவது மாநில மாநாட்டில் மத்திய-மாநில உறவுகள் குறித்து சிறப்புரையாற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின், நேரடியாக செய்ய முடியாத அரசியல் தலையீடுகளை சட்டத்தை கொண்டு செய்ய பார்க்கிறது மத்திய அரசு. மாநிலங்கள் பிரச்சனை தொடர்பாக கடிதம் எழுதியும் பதில் வருவதில்லை. மாநிலங்களின் எண்ணங்களை நாடாளுமன்றத்தில் எழுப்பினால் அதற்கு உரிய பதில் அளிப்பதில்லை. திமுக, கம்யூனிஸ்ட் ஆட்சியில் உள்ள மாநிலங்களுக்காக மட்டும் பேசவில்லை, அனைத்து மாநிலங்களுக்காகவும் பேசுகிறோம்.

ஒரே நாடு, ஒரே உணர்வு, ஒரே தேர்தல், இப்படியே போனால் ஒரே நாடு, ஒரே கட்சி என்ற நிலை ஏற்பட்டுவிடும். ஏதேசதிகாரத்துக்கு எதிரான குரல்தான் மாநில சுயாட்சியை வலியுறுத்தும் குரல். மாநிலங்களை காப்பாற்றுவதே, இந்தியாவை காப்பாற்றுவது என்பதாகும். மாநிலங்களை காப்பாற்றுவது என்பது மாநில மக்களின் உரிமை, மொழி, கலாச்சாரம் உள்ளிவைகளை காப்பாற்றுவது என்பதாகும். தேசிய கல்விக் கொள்கை, காவி கொள்கையாக உள்ளது. சகோதரத்துவம், சமூக நீதியை நிலை நாட்ட நாம் குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

ஒன்றிய அரசு என்று அழைப்பது தேசத்துக்கு எதிரானது என சிலர் கூறுகின்றனர். ஆனால், அரசியலமைப்பு சட்டத்தின் முதல் வரியே இந்தியா அல்லது பாரதம் என்றே குறிப்பிடப்படுகிறது. இந்திய கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக இருப்பவர்களை தேச துரோகிகள் என்று சொல்ல வேண்டும். மதம், மொழி, கலாச்சார ரீதியாக மக்களை பிளவுபடுத்துவதே பாஜகவின் நோக்கமாக உள்ளது. திராவிட இயக்கம் – கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கான நட்பு என்பது இரு இயக்கங்களும் தோன்றியபோதே உருவானது. மேலும், சோவியத் நாட்டுக்கு சென்றுவந்த பிறகே சுய மரியாதை கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்