முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 2 நாள் விருதுநகர் சுற்றுப்பயண விபரம்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்று பயணமாக விருதுநகர் செல்ல உள்ளார். இன்று ராமமூர்த்தி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் கட்சி நிகழ்விலும், நாளை மக்கள் நல திட்ட துவக்க நிகழ்விலும் கலந்து கொள்ள உள்ளார்.

Tamilnadu CM MK Stalin visit Virudhunagar

விருதுநகர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றும் நாளையும் விருதுநகர் மாவட்டம் சென்று அங்கு கட்சி நிகழ்வுகள் மற்றும் அரசு நல திட்டங்களை துவங்கி வைக்க உள்ளார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக விருதுநகர் சென்ற முதலமைச்சருக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதனை தொடர்ந்து, கன்னிச்சேரிபுதூர் பகுதியில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் கள ஆய்வு மேற்கொள்கிறார் முதலவர் மு.க.ஸ்டாலின். பிறகு,  பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகிறார். பின்னர், மாலையில் ராமமூர்த்தி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக கட்சி நிர்வாகிகள்கலந்துகொள்ளும் நிகழ்வில் முதலமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

அதன்பிறகு நாளை காலை, விருதுநகர் குமாரசாமி ராஜா நகரில் ரூ.77.12 கோடி மதிப்பீட்டில் 6 தளங்களுடன் புதியதாக கட்டப்பட்டுள்ள விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடத்தை முதலமைசார் திறந்து வைக்கிறார். பின்னர், பட்டம்புதூரில் நடக்கும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று அங்கு 40,000 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவும், 10,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்புரை ஆற்ற உள்ளார் என்று முதலமைச்சரின் 2 நாள் பயணம் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்