தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில், முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பின்படி, சமூக நீதிக்காவலர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்-கிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சென்னையில் அவருக்கு முழு உருவச்சிலை அமைக்கப்படும் என தெரிவித்து இருந்தார்.
சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் திருவுருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் சார்பில் சுமார் ரூ.52 லட்சம் மதிப்பில் இவரது உருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த திருவுருவ சிலையை இன்று திறந்து வைக்க உள்ளார். இன்று காலை 11 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அதன்பின், கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் அவரது சாதனைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கி உள்ளார்.
சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக உத்திரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், வி.பி.சிங் குடும்பத்தினர் மற்றும் தமிழக அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
மும்பை : இந்திய அணியை தற்போது கேப்டனாக ரோஹித் சர்மா தான் வழிநடத்தி வருகிறார். அவருக்குப் பிறகு, இந்திய அணியை…
நியூ யார்க் : உலகமே எதிர்நோக்கி காத்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவம்பர் 5) இந்திய நேரப்படி மாலை…
சென்னை : தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றத்தை கண்டு வந்த காரணத்தால் நகை வாங்கும் நகை பிரியர்கள்…
சென்னை : மக்களை எமோஷனலில் உருக வைத்துள்ள அமரன் படம் வசூல் ரீதியாகவும் கலக்கிக் கொண்டு இருக்கிறது. வசூல் ஒரு…
சென்னை : தமிழக அரசின் முறைப்படி, அரசாங்க திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்பதை கள ஆய்வு மேற்கொள்ள அரசாங்க நிகழ்வுகளில்…
அமெரிக்கா : அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஷ் மற்றும் டொனால்ட் டிரம்ப்பு…