கலைஞர் மகளிர் உரிமை திட்டம் 2-ஆம் கட்டம் – வரும் 10-ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர்..!
கடந்த செப்டம்பர் மாதம் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 115-ஆவது பிறந்தநாளையொட்டி, குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 1.06 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், 1.06 விண்ணப்பங்கள் தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், தமிழக அரசு, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் ரூ.1000 பெறாதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், அந்த அறிவிப்பின் படி, 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்களை பரிசீலித்து, அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கியது. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கும் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், மேல்முறையீட்டில் தகுதியானவர்களுக்கான ரூ.1000 வழங்கும் திட்டத்தை சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 10ம் தேதி துவக்கி வைக்க உள்ளார்.