இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
இன்று தலைவர் பொறுப்புக்கான தேர்தலில் போட்டியிட முதல்வர் மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
திமுக கட்சியில் தற்போது உட்கட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, மாவட்ட செயலாளர்கள், ஊராட்சி, பேரூராட்சி, கிராம பகுதி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, திமுக தலைவர், செயலாளர், பொருளாளர் போன்ற முக்கிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பொறுப்புகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோர் போட்டியிட உள்ளனர். இந்த நிலையில், இன்று தலைவர் பொறுப்புக்கான தேர்தலில் போட்டியிட முதல்வர் மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.