கிறிஸ்தவ ஆதிதிராவிடர்களுக்கும் சலுகைகள்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம்.!
கிறிஸ்தவ ஆதிதிராவிடர்களுக்கும் சலுகைகள் வழங்குவது குறித்து சட்ட பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வரவுள்ளார்.
இடஒதுக்கீட்டில் ஆதிதிராவிடர் மக்களுக்கு படிப்பில், வேலைவாய்ப்பில், உதவித்தொகையில் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை இந்துக்களில் உள்ள ஆதிதிராவிடர்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் சட்ட அமைப்பு உள்ளது. கிறிஸ்தவர்களில் உள்ள ஆதிதிராவிடர்கள் இதனை பயன்படுத்துவது முடியாது.
இதனை கருத்தில் கொண்டு, கிறிஸ்தவர்களில் உள்ள ஆதிதிராவிட மக்களுக்கும் சலுகைகள் வழங்கும்படியாக, இடஒதுக்கீடு சட்டத்தில் திருத்தும் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்ட பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவர உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.