இன்று இரவு “ட்விட்டர் ஸ்பேஸில்” உரையாற்றுகிறார் முதல்வர் மு.க..ஸ்டாலின்.!

Default Image

தமிழக முதல்வர் முக ஸ்டாலின், திராவிடர் கழகம் நடத்தும் ட்விட்டர் ஸ்பேஸ் நிகழ்ச்சியில் இன்று இரவு 8 மணிக்கு உரையாற்றுகிறார்.

வரலாற்றில் முதன்முறையாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின், திராவிடர் கழகம் நடத்தும் ட்விட்டர் ஸ்பேஸ் நிகழ்ச்சியில் இன்று இரவு 8 மணிக்கு உரையாற்றுகிறார். செப்டம்பர் மாதத்தை திராவிட மாதமாக கொண்டாடும் வகையில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி TwitterSpaces-ல் திராவிடத்தை கொண்டாடுவோம் நிகழ்ச்சி நடத்தி வருகிறது.

இதில், திமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றி வருகின்றனர். அந்தவகையில், செப்டம்பர் மாதம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று இரவு 8 மணிக்கு ட்விட்டர் ஸ்பேஸில் உரையாற்றவுள்ளார்.

திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு உணர்ந்து திராவிடத்தை கொண்டாடுவோம் என்ற நிகழ்ச்சி நடத்தி வருகிறது. இந்த நிலையில், திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நடத்தும் ‘திராவிட மாதத்தை’ இன்று இரவு அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் ட்விட்டர் ஸ்பேஸில் பங்கேற்று நிறைவு செய்து வைக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்