பாஜகவின் சவப்பெட்டியில் வரையப்படும் கடைசி ஆணி இதுதான்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவீட்.!

MK Stalin

திமுக கூட்டணி கட்சியினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நன்றி தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவீட் செய்துள்ளார். 

தமிழக மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை அண்மையில் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கை குறித்து திமுக கூட்டணி கட்சியினர் மட்டுமின்றி தேசிய கட்சி தலைவர்களும் தங்களை எதிர்ப்புகளை பதிவு செய்து வந்தனர். திமுக கூட்டணி கட்சியினர் இந்த கைது நடக்கையை கண்டித்து நேற்று கோயம்புத்தூரில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்.

கோவையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், திமுக எம்பி டி.ஆர்.பாலு, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், விசிக கட்சி தலைவர் திருமாவளவன், மதிமுக தலைவர் வைகோ, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், ஜவஹரிலுல்லா என பல்வேறு அரசியல் தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் ஓர் பதிவை இட்டுள்ளார். அதில், இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவது தான் பாஜகவின் சவப்பெட்டியில் அறையப்படும் கடைசி ஆணியாக இருக்கும் என மிக கடுமையாக விமர்சனம் செய்து பதிவிட்டு உள்ளார்.

மேலும், அரசியல் நோக்கங்களுக்காக விசாரணை அமைப்புகளை அப்பட்டமாகத் தவறாகப் பயன்படுத்தும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திய நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் நன்றி! இன்று கோயம்புத்தூரில் நாம் வெளிப்படுத்திய ஒற்றுமையும் உறுதிப்பாடும் எங்கும் பரவி, பொய்க் கதைகளால் பா.ஜ.க. உருவாக்கி வைத்திருக்கும் தோற்கடிக்க முடியாத பிம்பத்தின் அஸ்திவாரத்தை ஆட்டம் காணச் செய்யும். வரும் பொதுத்தேர்தலில் தோல்வி உறுதியாகிவிட்டதை பா.ஜ.க. உணர்ந்துவிட்டது. எதிர்க்கட்சியினரை அரசியல்ரீதியாக எதிர்ப்பதற்குப் பதிலாக, தங்களுடைய தோல்விகளை மறைக்கக் கோழைத்தனமான, திமிர்த்தனமான நடவடிக்கைகளில் பா.ஜ.க. இறங்கியுள்ளது. என்றும் பங்கேற்றுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

TAMIL LIVE NEWS
Bumrah - Bhuvneshwar kumar
Vidaamuyarchi Trailer
Israel Hamas Ceasefire
SpaDex Docking - PM Modi
Train movie team wishes Vijay Sethupathi
gold price