ஜூன் 23ம் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு.!
ஜூன் 23ம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு என தகவல்.
2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக எதிர்கட்சிகளை திரட்டும் விதமாக பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பல்வேறு தலைவர்களை சந்தித்து வருகிறார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, சரத் பவார், உத்தவ் தாக்கரே, நவீன் பட்நாயக், கெஜ்ரிவால் உள்ளிட்டோரை சந்தித்து பேசியிருந்தார்.
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் மத்தியில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைமையிலான அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் இந்த ஆலோசனை கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஜூன் 23ம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திராவிடம் என்ற சொல்லைப் பார்த்து இன்று சிலர் பயப்படுகிறார்கள். கண்ணை மூடிக்கொண்டு விதண்டாவாதம் செய்துக் கொண்டிருக்கிறார்கள். வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் பாஜகவுக்கு எதிரான சக்திகளை ஒன்று சேர்க்கும் தேர்தலாக இருக்கும் என்று பேசியுள்ளார்.