யார் ஆட்சியில் இருந்தாலும் மேகதாது கட்ட ஒருபோதும் விடமாட்டோம்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்.!
மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காவேரி டெல்டா பகுதியில் கால்வாய்களை தூர்வாரும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். அதன் பின்னர் திருச்சியில் விவசாய பணிகள் குறித்து செய்தியாளர்கள் மத்தியில் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இது குறித்து பேசுகையில், கவேரி டெல்டா பகுதியில் மத்திய அரசு நிலக்கரி எடுக்க டெண்டர் அறிவித்த உடனே அதனை எதிர்த்து திமுக அரசு போராடியது. கடிதம் எழுதியது. இதனை தொடர்ந்து தன் ஏல அறிவிப்பை மத்திய அரசு ரத்து செய்தது.
கடந்த 2021- 2022 இல் காவேரி டெல்டா பகுதிகள் கால்வாய்களை தூர்வர 62.90 கோடி, ஒதுக்கீடு செய்யப்பட்டு, 3800 கிமீ தொலைவில் கால்வாய் தூர்வாரப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் 12இல் மேட்டூர் ஆணை திறக்கப்பட்டது.
இதன் காரணாமாக 4 லட்சத்து 90 ஆயிரம் குருவை சாகுபடி, 13 லட்சம் சம்பா சாகுபடி என மொத்தமாக 33 லட்சம் டன் நெல் விளைவிக்கப்பட்தது.
அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு 2022- 2023இல் கால்வாய் தூர்வார நீர்வளத்துறை சார்பில் 90 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு, தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் ஜூன் 12இல்நீர் திறக்கப்பட உள்ள நிலையில், இதுவரை 96 விழுக்காடு தூர்வாரும் பணிகள் முழுதாக முடிந்தது. இதன் மூலம் கடந்த ஆண்டுகளை விட அதிக அளவில் விளைச்சல் இருக்கும் என கூறினார்.
அடுத்ததாக, கர்நாடக அரசு மேகதாதூவில் அணைக்கட்டும் முயற்சி பற்றி கேட்கப்பட்டபோது ஒருபோதும் மேகதாதுவில் அணை கட்ட விட மாட்டோம் என்றும் கர்நாடகாவில் ஆட்சிகள் மாறினாலும் கலைஞர் ஆட்சி இருக்கும் போது எப்படி இருந்தோமோ, இன்னும் அதே நிலைபாட்டில் தான் இருக்கிறோம் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.