Tamilnadu CM MK Stalin launched Breakfast Expansion Scheme [Image source : SUN NEWS]
திருவள்ளூர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூரில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்தார்.
கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்களுக்கு காலை உணவு அளிக்கும் முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தை முதலல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 14,40,351 மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்.
இந்த காலை உணவுத்திட்டத்தை வரும் ஜூலை 15 கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளன்று அனைத்து கிராமப்புறங்களிலும் விரிவாக்கம் செய்யப்பட உள்ள என முன்னதாக அறிவிக்கப்பட்டது. இதனை திருவள்ளூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு விரிவாக்க திட்டத்தை துவக்கி வைக்க உள்ளார் என்றும், அதே போல மற்ற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், எம்பிக்கள் கலந்துகொண்டு திட்டத்தை துவக்கி வைப்பார்கள் என கூறப்பட்டது.
அறிவித்தது போல, இன்று திருவள்ளூர் மாவட்டம், கீழச்சேரியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் “காலை உணவுத்திட்டம் விரிவாக்க திட்டத்தை” முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாணவர்களுக்கு அளிக்கப்படும் காலை உணவை மாணவர்களுடன் அமர்ந்து முதலமைச்சர் உட்கொண்டார்.
முதலில், இந்த திட்டத்தின் கீழ் 18.50 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றனர். தற்போது விரிவாக்க திட்டத்தின் கீழ் கூடுதலாக 2.20 லட்சம் மாணவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ளனர். இந்த திட்டத்தை திருவள்ளூரில் தொடங்கி வைத்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், இத்திட்டத்தின் மூலம் 20.73 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் சத்தான உணவை சாப்பிடுகிறார்கள் என்று குறிப்பிட்டார்.
மேலும் பேசுகையில், பள்ளி நோக்கி குழந்தைகள் வர வேண்டும் என்பதற்காக தான் இந்த திட்டத்தை தொடங்கினேன். சென்னையில் ஒரு பள்ளிக்கு சென்ற போது அங்கு பயிலும் குழந்தை “இன்னும் காலை உணவு சாப்பிடவில்லை” என கூறியதை கேட்டு தான் இந்த திட்டத்தை உருவாக்கினேன். பெற்றோருக்கே உரித்தான பாச உணர்வோடு நான் உருவாக்கிய திட்டம் தான். இந்த திட்டம்.
இந்த காலை உணவுத் திட்டம் மூலம் பெற்றோரின் பொருளாதார சுமையை அரசு குறைத்துள்ளது.
இத்திட்டம் அரசுக்கு செலவு இல்லை. எதிர்கால தலைமுறையை உருவாக்குவதற்கான முதலீடு. இந்த திட்டத்திற்காக அரசுக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, எந்த ஒரு குழந்தையும் பள்ளிக்குப் பசியுடன் வரக் கூடாது என்பதே எனது குறிக்கோள்.
2 ஆண்டுகளுக்கு முன்னர் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளன்று இந்த திட்டத்தை தொடங்கி வைத்தேன். இன்று பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளன்று இந்த திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளேன் என்று காலை உணவு திட்ட விரிவாக்க நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…
டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு…