ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு: தமிழர்களுக்கு தொடர்பு இருப்பதாக மத்திய அமைச்சர் பேச்சு… மு.க.ஸ்டாலின் கண்டனம்

Shobha Karandlaje: பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் தமிழர்களுக்கு தொடர்பு இருப்பதாக மத்திய இணையமைச்சர் ஷோபா கரந்தலாஜே பேசிய விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் அவருக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார், இன்று போராட்டம் ஒன்றில் கலந்துக் கொண்ட போது ஷோபா இவ்வாறு பேசினார்.

Read More – நாளை வேட்புமனு தாக்கல்! இதற்கு அனுமதியில்லை: தேர்தல் அலுவலர் முக்கிய அறிவிப்பு

செய்தியாளர்களிடம் அவர் பேசும் போது, “பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த வெடிகுண்டு சம்பவம் தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்களால்தான் நடைபெற்றது” என்பது போன்ற கருத்தை முன் வைத்தார். மேலும் டெல்லியிலிருந்து வருபவர்கள், ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ எனவும் கேரளாவிலிருந்து வருபவர்கள் இங்குள்ள ‘மக்கள் மீது ஆசிட் வீசுகின்றனர்’ என்பது போன்ற சர்ச்சை கருத்துக்களையும் அவர் கூறினார். ஷோபா கரந்தலாஜேவின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Read More – கோவை பிரசாரத்தில் தேர்தல் விதிமீறல்..! பிரதமர் மோடி மீது பரபரப்பு புகார்

இந்த நிலையில் ஷோபா கரந்தலாஜேவின் கருத்துக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரின் எக்ஸ் தள பதிவில், “மத்திய பாஜக அமைச்சர் ஷோபாவுக்கும் கடும் கண்டனங்கள்.. இது போல பேச ஒருவர் NIA அதிகாரியாக இருக்க வேண்டும் அல்லது ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்துடன் நெருக்கமாக தொடர்புடையவராக இருக்க வேண்டும்.

Read More – மேடையில் ஓபிஎஸ்… 57 வருசமா 2 கட்சிகள்.. மாற்றம் வேண்டும்.! அன்புமணி ராமதாஸ்.!

பாஜகவின் இந்த பிளவுபடுத்தும் பேச்சை தமிழர்களும் கன்னடியர்களும் புறக்கணிப்பார்கள். அமைதி, நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய ஷோபா மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். பிரதமர் முதல் கட்சி தொண்டர்கள் வரை பாஜகவில் உள்ள அனைவரும் கேவலமான பிரிவினைவாத அரசியலில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live update
Union Minister Amit shah
Pushpa2
TVK Vijay - Union minister Amit shah
chennai rains
OneNation OneElection - Vijay Antony
Savuku Sankar arrested