ஊரகப் பகுதிகளில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதலவர் மு.க.ஸ்டாலின்.!

Makkaludan Muthalvar

தருமபுரி : பொதுமக்களின் கோரிக்கைகள், தேவைகளைக் கண்டறிந்து அவற்றுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் வகையில், தமிழ்நாடு அரசின் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஊரகப் பகுதிகளில் இன்று தருமபுரி பாளையம் புதூரில் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

“மக்களுடன் முதல்வர்“ திட்டம் என்பது தமிழக முதல்வர் மக்கள் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து தீர்க்கும் ஒரு திட்டமாகும். முதல்கட்டமாக நகர்ப்புறங்களில் கடந்த டிசம்பர் மாதம் 18-ம் தேதி இத்திட்டம் தொடங்கப்பட்டது. தற்பொழுது, ஊரகப் பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம் வரும் செப்டம்பர் 15 வரை 12,525 கிராம ஊராட்சிகளில் 2,500 மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்கள் நடைபெற உள்ளன.

அதன்படி, 15 அரசுத்துறைகளின் 44 சேவைகளுக்கு மக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட உள்ளன. தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் முதல் கட்டத்தில் 8.74 இலட்சம் கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

தருமபுரியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட விரிவாக்க நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அரூர் அரசு மருத்துவமனை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். தருமபுரி – வெண்ணாம்பட்டி சாலையில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும். பஞ்சபள்ளி, ராஜபாளையம் அணைக்கட்டுகள் புனரமைக்கப்படும் என்று தெரிவித்தார். பளையம்புதூர் அரசு பள்ளியில் பழுதடைந்த நிலையில் 4 வகுப்பறைகள் அதன் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்.

ரூ.51 கோடி மதிப்பில் அரூர் அரசு மருத்துவமனை உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். வெண்ணாம்பட்டி சாலையில் ரயில்வே மோம்பாலம் ரூ.31 கோடியில் மேம்படுத்தப்படும். பஞ்சப்பள்ளி, ராஜபாளையம் அணைகட்டுகள் ரூ.50 கோடி மதிப்பில் புனரமைக்கப்படும் என்று  தருமபுரி மாவட்டத்திற்கு 7 அறிவிப்புகளை வெளியிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்