இன்று என்ன நாள் தெரியுமா? அண்ணா குறித்து நினைவுகளை பகிர்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
அண்ணா அமர்ந்தார்.. தமிழ்நாடு எழுந்தது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சென்னை : 1967 ஆம் ஆண்டு தமிழக அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு திருப்புமுனை நாளாக மாறியது. ஏனென்றால், அறிஞர் அண்ணாதுரை (சி. என். அண்ணாதுரை) தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) முதன்முறையாக தமிழகத்தில் ஆட்சியை கைபிடித்தது. தேர்தலில் வெற்றிபெற்றதை தொடர்ந்து அந்த ஆண்டு மார்ச் 6 -ஆம் தேதி அறிஞர் அண்ணாதுரை முதல்வராக பொறுப்பேற்றார்.
1967 சட்டமன்ற தேர்தலில், திமுக 234 இடங்களில் 137 இடங்களை வென்று மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. அதற்கு முன்பு வரை தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி இருந்தது. அதனை, முடிவுகொண்டு, முதன்முறையாக ஒரு திராவிட கட்சி ஆட்சிக்கு வந்த பெரும் நிகழ்வாக அந்த ஆண்டு அமைந்தது.
எனவே, இன்று அறிஞர் அண்ணாதுரை முதல்வராக பொறுப்பேற்ற நாள் என்பதால் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் அண்ணா குறித்து நினைவுகளை பகிர்ந்துள்ளார். அதில் ” அறிஞர் அண்ணா முதல்வராக பொறுப்பேற்று பொறுப்பில் அமர்ந்த போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும், அந்த நாட்களில் வந்த செய்தி தாளையும் வெளியிட்டுள்ளார்.
அது மட்டுமின்றி, மார்ச் 6 பேரறிஞர் அண்ணா தலைமையிலான கழக அரசு பொறுப்பேற்ற நாள்! 1967. அண்ணா அமர்ந்தார். தமிழ்நாடு எழுந்தது! தலைநிமிர்ந்த தமிழ்நாட்டுக்குத் தீங்கொன்று வருகுதென்றால் வேலெனப் பாய்வோம்! வேங்கையெனச் சீறிடுவோம்! வெற்றி வாகை தனைச் சூடிடுவோம்” எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1967: அண்ணா அமர்ந்தார்; தமிழ்நாடு எழுந்தது!
தலைநிமிர்ந்த தமிழ்நாட்டுக்குத் தீங்கொன்று வருகுதென்றால் வேலெனப் பாய்வோம்! வேங்கையெனச் சீறிடுவோம்! வெற்றி வாகை தனைச் சூடிடுவோம்!#தமிழ்_வாழ்க! #StopHindiImposition #FairDelimitationForTN pic.twitter.com/wbCQlUJ3YL
— M.K.Stalin (@mkstalin) March 6, 2025