முதல்வர் ஸ்டாலின் திருவாரூரில் அரசின் திட்டப்பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
கள ஆய்வில் முதல்வர்: திருவாரூருக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், நேற்று அரசின் திட்டப்பணிகள் குறித்து நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் மூலம் முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரில் சென்று, அரசு செயல்படுத்திய திட்டங்கள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
திருவாரூரில் ஆய்வு: இதன் அடிப்படையில் முதல்வர் ஸ்டாலின் 2 நாள் பயணமாக நேற்று திருவாரூருக்கு சென்றார், அங்கு அவர் அண்மையில் மறைந்த, திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம். உபயதுல்லா வின் இல்லத்திற்கு நெறி சென்று ஆறுதல் தெரிவித்தார். அதன்பிறகு அவர் திருவாரூரில் அண்மையில் திறக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையத்திற்கும் நேரில் சென்று ஆய்வு செய்து, பல்வேறு திட்டப்பணிகள் குறித்தும், ஆய்வு மேற்கொண்டு அதனை விரைவில் முடிக்குமாறு ஆட்சியரிடம் கூறினார்.
கமலாலயம் நினைவு: இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின், திருவாரூரில் உள்ள கமலாலயம் குளத்தில் படகில் சென்று ஆய்வு செய்தார், இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்வீட்டில், கலைஞர் வளர்ந்த திருவாரூரில் உள்ள கமலாலயம், கடல் போலத் ‘தோற்றமளிக்கும்’. ஆனாலும் அது குளம்தான். அதன் ‘நடுவண்’ கோயில் படிக்கட்டுகளை அடைவதற்கான எதிர்நீச்சலை நெஞ்சுக்கு நீதியில் விளக்கியிருப்பார் தலைவர். இன்று அந்தப் படிக்கட்டுகளில் அமர்ந்து மகிழ்ந்தபோது, குளத்தின் அலைகளில் என் சிறு வயது நினைவுகள். நெஞ்சத்தில் என்றும் நினைவலைகளாக முத்தமிழறிஞர்! என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை : தேசிய தேர்வு முகமை கடந்த ஆண்டு இறுதியில் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏற்கனவே, மத்திய அரசு நிதி சரியாக வழங்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில்,…
சென்னை : நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…
சென்னை : தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த…
ஜப்பான் : தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 6.8 என்ற ரிக்டர்…
நியூ யார்க : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்க போகிறார். அந்த…